2 நாட்களில் அமெரிக்காவில் 'சர்கார்' செய்த மிகப்பெரிய சாதனை

  • IndiaGlitz, [Thursday,November 08 2018]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று உலகம் முழுவதும் வெளியாகி ஓப்பனிங் வசூல் சாதனை செய்துள்ளது. இந்த படத்தின் முதல் நாள் வசூல் பிரமிக்கத்தக்க வகையில் இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இரண்டே நாட்களில் இந்த படம் அமெரிக்காவில் இதுவரை இல்லாத சாதனையை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

'சர்கார்' படத்தை அமெரிக்காவில் வெளியிட்ட நர்மாதா டிராவல்ஸ் மற்றும் கோலிவுட் மூவீஸ் நிறுவனங்கள் வெளியிட்டிருக்கும் தகவலின்படி இந்த படம் அமெரிக்காவில் இரண்டு நாட்களில் அரை மில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளது. ஒரு தமிழ் அமெரிக்காவில் இந்த அளவுக்கு இதுவரை வசூல் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் தீபாவளி அன்று அரசு விடுமுறை இல்லை. வாரத்தின் முதல் நாளான திங்கள் அன்று வெளியாகியும் இந்த படம் செய்த அபாரமான வசூல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

More News

'சர்கார்' விஜய்க்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு

வழக்கம் விஜய்யின் 'சர்கார்' படம் குறித்தும் அரசியல்வாதிகள் பாராட்டியும், விமர்சனம் செய்தும் பேச ஆரம்பித்துவிட்டனர். ஏற்கனவே ஒப்பனிங் வசூலில் கிங் என நிரூபித்துள்ள

மழலை மொழியில் கமலுக்கு வாழ்த்து கூறிய நியூஜெர்ஸி சிறுமி

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர்களும் ரசிகர்களும் தொடர்ந்து இன்று காலை முதல் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

'சர்கார்' விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் நேற்றைய தீபாவளி தினத்தில் வெளியாகி அனைத்து முதல் நாள் வசூல் சாதனைகளையும் அடித்து நொறுக்கியுள்ளது.

'மாரி 2' படத்திற்காக தர லோக்கலாக மாறும் 'மலர்' டீச்சர்

சாய்பல்லவி என்றாலே அவரது மலர் டீச்சர் கேரக்டர் நிச்சயம் நம் கண்முன் வரும். அந்த அளவுக்கு ஒரு இயல்பான கேரக்டரில் 'பிரேமம்' படத்தில் நடித்து பெரும் அளவில் ரசிகர்களை பெற்றவர் சாய்பல்லவி

நல்ல கதையா திருடுங்கடா!...எச்.ராஜாவின் 'சர்கார்' டுவீட்?

விஜய் நடித்த 'மெர்சல்' படத்தை ஹிட்டாக்கிய பெருமை எச்.ராஜாவையும் சேரும். ஆனால் விஜய் நடித்த அடுத்த படமான 'சர்கார்' படம் குறித்து இதுவரை எச்.ராஜா உள்பட பாஜக தலைவர்கள் பெரிய அளவில் பேசவில்லை.