இந்திய அளவில் முதல் இடத்தை நோக்கி செல்லும் 'புலி'

  • IndiaGlitz, [Saturday,September 19 2015]

விஜய் நடித்த 'புலி' திரைப்படம் இதுவரை இல்லாத அளவில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் ரிலீசான இந்த படத்தின் டிரைலருக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பே இதனை உறுதிப்படுத்திகிறது.

ஏற்கனவே 'புலி' படத்தின் டிரைலர் பல சாதனைகளை செய்ததை அவ்வப்போது பார்த்து வந்தோம். இந்நிலையில் இந்த டிரைலர் ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. ஒரு தமிழ் திரைப்படத்தின் டிரைலர் ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் பெறுவது இதுவே முறை.

அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே இதுவரை அதிக லைக்குகள் பெற்ற டிரைலராக சல்மான்கானின் 'கிக்' உள்ளது. இந்த சாதனையையும் 'புலி' கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. 'கிக்' படத்தின் டிரைலர் இதுவரை 1,01,847 லைக்குகள் பெற்றுள்ளது. ஆனால் விஜய்யின் 'புலி', படத்தின் டிரைலர் 1,01,640 லைக்குகள் பெற்றுவிட்டது. இன்னும் 208 லைக்குகள் பெற்றுவிட்டால் இந்திய அளவில் 'புலி' டிரைலர் அதிக லைக்குகள் பெற்ற பெருமையை பெறும். இந்த சாதனை இன்னும் ஒருசில மணி நேரங்களில் நிகழ்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப், பிரபு, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.