மாநில அளவில் தவெக தலைவர் விஜய் நடத்தும் ஆலோசனை கூட்டம்: தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Saturday,June 08 2024]

தளபதி விஜய் மாநில அளவில் தனது கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த இருப்பதை அடுத்து மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தளபதி விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார் என்பதும் இந்த கட்சி வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ’தளபதி 69 ’படத்தை முடித்துவிட்டு அதன் பின்னர் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் முழுவதுமாக அரசியலில் ஈடுபட போவதாகவும் விஜய் தெரிவித்து இருந்தார். மேலும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பின் போது கிடைத்த ஓய்வு நேரத்தில் கூட அவர் அரசியல் ஆலோசனை செய்து வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி சென்னை பனையூரில் வரும் 18ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்தும், புதிய நிர்வாகிகள் நியமனம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும் அது மட்டுமின்றி 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு குறித்தும் ஆலோசனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் வரும் 18ஆம் தேதி ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தென்னிந்திய பிரபலம் - தொழிலதிபர் காலமானார்.. ரஜினிகாந்த் உட்பட பலர் இரங்கல்..!

தென்னிந்திய அளவில் பிரபலமான தொழிலதிபர் ராமோஜிராவ் பிலிம் சிட்டியின் உரிமையாளர் ராமோஜிராவ் காலமானதையடுத்து ரஜினிகாந்த், சிரஞ்சீவி, குஷ்பு உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இரட்டை வேடத்தில் நடிக்கும் 'ரெட்ட தல' திரைப்படம்.. சூப்பர் அப்டேட் கொடுத்த அருண்விஜய்..!

அருண் விஜய் நடிக்கும் 36 வது திரைப்படமான 'ரெட்ட தல' படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது

எனக்கும் ராஷி கண்ணாவுக்கு போட்டி என்பது உண்மைதான்.. தமன்னா கூறிய தரமான விளக்கம்..!

சமீபத்தில் வெளியான 'அரண்மனை 4' திரைப்படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா  ஆகிய இருவரும் நடிப்பிலும் கிளாமரிலும் போட்டி போட்ட நிலையில் 'எங்கள் இருவருக்கும் போட்டி இருந்தது உண்மைதான்

மகாலட்சுமியை வழிபடுபவர்களுக்கு கிடைக்கும் 15 பேறுகள்

திருமகள், ஸ்ரீலட்சுமி, அம்புஜவல்லி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் மகாலட்சுமி, செல்வம், செழிப்பு, அதிர்ஷ்டம், ஞானம், வளம், அழகு, துணிச்சல் போன்ற

பிரதமர், முதல்வர் என 2 பதவியேற்பு விழாவிற்கும் ரஜினிக்கு அழைப்பு.. சூப்பர் ஸ்டாரின் முடிவு என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரது பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும் இரண்டு விழாவுக்கும்