பிரமிப்பை ஏற்படுத்திய மெர்சல் படத்தின் கிராபிக்ஸ் மேக்கிக் வீடியோ

  • IndiaGlitz, [Thursday,December 21 2017]

தளபதி விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியான 'மெர்சல்' திரைப்படம் தமிழக பாஜக தலைவர்களின் உதவியால் எதிர்பார்த்ததைவிட இருமடங்கு வசூல் செய்து விஜய்யின் வெற்றிப்பட பட்டியலில் இணைந்தது

இந்த படத்தில் விஜய், அட்லியை அடுத்து பரபரப்பாக பேசப்பட்டது கிராபிக்ஸ் காட்சிகள் தான். விஜய்யின் இருவேடங்கள், மேஜிக் காட்சிகள் உள்பட கிராபிக்ஸ் காட்சிகளில் உலகத்தரம் இருந்ததால் இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றன

 

இந்த நிலையில் இந்த படத்திற்கு கிராபிக்ஸ் பணியை செய்த நிறுவனம் நேற்று யூடியூபில் கிராபிக்ஸ் காட்சிகள் அமைக்கப்பட்ட விதம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. சாதாரண காட்சியாகவும், அதற்கு கிராபிக்ஸ் செய்த பின்னர் உள்ள காட்சியாகவும் இந்த வீடியோ இருந்ததால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் இந்த வீடியோவுக்கு பெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். எனவே இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

More News

இந்திய அளவில் 25வது இடத்தை பிடித்த தளபதியின் 'மெர்சல்'

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்த நிலையில் இந்த படத்தின் வசூல் குறித்து தகவல்களை ஒருசிலர் சர்ச்சையாக்கினர்.

'அருவி', 'அஸ்மா' இரண்டு படத்திற்கும் என்ன வித்தியாசம்: இயக்குனர் அருண்பிரபு விளக்கம்

கடந்த வாரம் வெளியான 'அருவி' திரைப்படம் கிட்டத்தட்ட அனைத்து தரப்பினர்களின் ஆதரவையும் பெற்று திரையரங்குகளில் இரண்டாவது வாரமாக ஓடிவருகின்றது.

2ஜி வழக்கின் தீர்ப்பும், சித்தார்த்தின் 'திருட்டுப்பயலே' டுவீட்டுக்களும்

"சூப்பர் ஹிட் என்ற செய்தி வந்துள்ளது. அனைவருக்கும் விடுதலை. என் இந்தியாவே சிறந்தது. இந்திய அரசியலின் தூய்மையான குற்றமற்ற தன்மைக்கு என் வாழ்த்துகள்

தல தோனியை இயக்கும் 'நான்', 'எமன்' இயக்குனர் ஜீவாசங்கர்

விஜய் ஆண்டனியை நடிகராக 'நான்' படத்தில் அறிமுகம் செய்த இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கர், பின்னர் மீண்டும் விஜய் ஆண்டனியுடன் இணைந்து 'எமன்' என்ற படத்தை இயக்கினார்

மறைந்த பிரபல தமிழ் கவிஞருக்கு சாகித்ய அகாதமி விருது

சாகித்ய அகாதமி விருது என்பது ஒவ்வொரு எழுத்தாளரின் கனவாக இருந்து வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது மறைந்த கவிஞர் இன்குலாப் மற்றும் பிரபல எழுத்தாளர் யூமா வாசுகி