பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற தளபதி விஜய்யின் 'மெர்சல்'

  • IndiaGlitz, [Friday,February 08 2019]

நடிகர் விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பாடப்புத்தகத்தில் விஜய் நடித்த 'மெர்சல்' படம் குறித்த கேள்வி ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் International achievement recognition விருதுகள் 2014ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகின்றது. 2018ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான சர்வதேச விருது யாருக்கு வழங்கப்பட்டது? என்ற கேள்வியும் அதன் பதிலான விஜய்யின் மெர்க்சல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே சி.பி.எஸ்.இ மூன்றாம் வகுப்பு பாடத்தில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை குறித்த பாடம் ஒன்றில் 'மெர்சல்' படத்தில் விஜய்யின் வேஷ்டி கட்டிய புகைப்படம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது