முடிஞ்சா தொட சொல்றா பார்ப்போம்: விஜய் எச்சரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தினந்தோறும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே
மேலும் ’மாஸ்டர்’ படம் குறித்த அப்டேட்கள் இனி தினமும் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவு செய்தது. இந்த நிலையில் சற்று முன்னர் ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற 9 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது
அதில் ’இதுக்கு முன்னாடி வந்தவங்க உயிர் பயத்தில் ஓடி போய் இருக்கலாம், ஆனால் என் கதையே வேற, முடிஞ்சா தொட்றா பார்க்கலாம் என்று விஜய் எச்சரிக்கை செய்வது போன்ற காட்சி அதில் உள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய இந்த 9 வினாடி வீடியோவே மிகப்பெரிய அளவில் மாஸாக இருக்கும் நிலையில் படம் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை என விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு கமெண்ட் அளித்து வருகின்றனர்
Mudinjaa thoda solraa paapom! ??
— XB Film Creators (@XBFilmCreators) January 6, 2021
Vaathi's voice is finally here.
Happy ah nanba? ??#Master #MasterPromo2@actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @MalavikaM_ @anirudhofficial @imKBRshanthnu @andrea_jeremiah @Lalit_SevenScr @Jagadishbliss pic.twitter.com/yiMyEHZujj
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments