கொளுத்துங்கடா: நள்ளிரவு 12 மணிக்கு வெளியான 'மாஸ்டர்' போஸ்டர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்யின் பிறந்தநாள் இன்று உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகம் முழுவதும் தளபதி விஜய்யின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விதவிதமான போஸ்டர்கள் அடித்து மாநிலம் முழுவதும் விஜய் ரசிகர்கள் ஒட்டி, இந்த பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு இருப்பதால் இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் போஸ்டர்கள் ஒட்டாமல் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் அட்டகாசமான புதிய போஸ்டர் ஒன்று சரியாக நள்ளிரவு 12 மணிக்கு படக்குழுவினர் தங்களது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர், ஜெகதீஷ், லலிதகுமார், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்பட படக்குழுவினர் வெளியிட்டுள்ள இந்த அட்டகாசமான போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நள்ளிரவு 12 மணிக்கு வெளியான இந்த போஸ்டர் ஒரு சில நிமிடங்களில் உலக அளவில் டுவிட்டரில் ட்ரெண்ட் ஆனது. அட்டகாசமாக விஜய் டான்ஸ் ஆடும் கலர்ஃபுல் போஸ்டரை விஜய் ரசிகர்களால் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள ‘கொளுத்துங்கடா’ என்ற வார்த்தையும் டிரெண்டாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Happy birthday @actorvijay anna ??#HBDTHALAPATHYVijay https://t.co/eHNK0TC5CU
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 21, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments