ரிலீசுக்கு முன்பே ரூ.200 கோடி பிசினஸ், 'மாஸ்டர்' ஓடிடியில் வராதது ஏன்? பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Saturday,August 29 2020]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தமிழகத்தில் திரையரங்குகள் திறக்காத காரணத்தினால் ஓடிடியில் தற்போது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. இதுவரை சின்ன பட்ஜெட் படங்கள் மட்டுமே ஓடிடியில் ரிலீஸ் ஆகி கொண்டிருந்த நிலையில் தற்போது ’சூரரைப்போற்று’ சக்ரா உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களும் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் ஓடிடியில் தளங்களின் அடுத்த குறி ’மாஸ்டர்’ படமாகத்தான் உள்ளது என்றும் ’மாஸ்டர்’ திரைப்படமும் ஓடிடியில் விரைவில் வெளியாகும் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ’மாஸ்டர்’ படக்குழுவினர் இது குறித்து கூறிய போது ’மாஸ்டர்’ திரைப்படம் கண்டிப்பாக திரையரங்கில் தான் வரும். ஓடிடியில் வராது என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளனர்

’மாஸ்டர்’ படத்தின் வியாபாரம் மட்டும் கிட்டத்தட்ட ரூ.200 கோடிக்கும் மேலாக ஆகியிருப்பதாகவும் தமிழ்நாட்டில் மட்டும் திரையரங்க உரிமை ரூ 70 கோடிக்கு விற்பனை செய்ததாகவும் அதேபோல் சாட்டிலைட் சாட்டிலைட் ரைட்ஸ் 30 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் இதுவரை இந்த படத்திற்காக அட்வான்ஸ் கொடுத்த எந்த விநியோகிஸ்தர்களும் பணத்தை திருப்பிக் கேட்கவில்லை என்றும் எவ்வளவு நாள் ஆனாலும் தாங்கள் காத்திருக்க தயார் என்றும் விநியோகஸ்தர்கள் கூறியிருப்பதால் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

மேலும் தமிழகத்தில் மட்டும் திரையரங்குகள் திறந்தால் உடனடியாக ’மாஸ்டர்’ படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என்றும் விஜய் படத்துக்கு உலகம் முழுவதும் மார்க்கெட் இருப்பதால் உலகின் அனைத்து நாடுகளிலும் திரையரங்குகள் திறந்தால் மட்டுமே மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது கொரோனாவால் மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ’மாஸ்டர்’ படத்தை ரிலீஸ் செய்ய விஜய்யே விரும்பவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்

அமேசான் தரப்பிலிருந்து தங்களிடம் ’மாஸ்டர்’ படத்தை கேட்டு அணுகியது உண்மைதான் என்றும், ஆனால் படத்தை தர முடியாது என்று கூறியவுடன் அதன்பிறகு எந்த ஓடிடியில் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றும் படக்குழுவினர் தெளிவுபடுத்தினர்

எனவே கொரோனா வைரஸ் நிலைமை சரியானவுடன் 2021 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் மாஸ்டர்’ படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகளை தற்போது செய்து கொண்டிருக்கிறோம் என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர்

எனவே விஜய்யும் அவரது ரசிகர்களும் விரும்பியபடி ’மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகாது என்றும் திரையரங்குகள் தான் ரிலீஸாகும் என்றும் மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது
 

More News

துறை மேம்பாட்டுக்காக கொரோனா பேரிடர் காலத்திலும் அதிரடி திட்டங்களை செயல்படுத்திய தமிழக அரசு!!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளருக்கு கொரோனா: கோலிவுட் அதிர்ச்சி

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது என்பது தெரிந்ததே. தினமும் தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால்

வடகொரிய அதிபர் மரணம்? சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முக்கியத் தகவல்!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் கோமாவில் இருக்கிறார்

டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்ட 504 தங்கக்கட்டிகள்!!! பரபரப்பான கடத்தல் பின்னணி!!!

டெல்லி ரயில்வே நிலையத்தில் நேற்று வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் 504 தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்ததாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது

சுரேஷ் ரெய்னாவை அடுத்து தீபக் சஹாரும் நாடு திரும்புகிறாரா? என்ன ஆச்சு சிஎஸ்கே அணிக்கு?

2020ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட 8 அணி வீரர்களும் சமீபத்தில் துபாய் சென்றுள்ளனர்.