அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த 'மாஸ்டர்' வில்லன் நடிகர்..!

  • IndiaGlitz, [Saturday,September 21 2024]

அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்த வில்லன் நடிகர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய நிலையில், தற்போது இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்து எந்தவித தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது விஜய்யின் ’மாஸ்டர்’ உள்பட சில படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ், ‘குட் பேட் அக்லி’ படத்தின் முக்கிய வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அர்ஜுன் தாஸ், சமீபகாலமாக ஹீரோவாக நடித்து வரும் நிலையில், அஜித் படம் என்பதால் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், அவரது வில்லன் கதாபாத்திரம் கதையின் திருப்புமுனையை ஏற்படுத்தும் வலிமையான கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்து அறிவிப்பை விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

 

More News

புரட்டாசி மாத சிறப்புகள் மற்றும் வழிபாடு

தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதத்திற்கு தனி சிறப்பு உண்டு. இம்மாதம் தெய்வீக சக்தி மிகுந்த மாதமாகக் கருதப்படுகிறது. காலநிலை மாற்றம் ஏற்படும் இந்த மாதத்தில், தெய்வ சிந்தனையில் ஆழ்ந்து,

கமல்ஹாசனின் 'தக்லைஃப்' படப்பிடிப்பில் சுதா கொங்காரா.. வைரல் புகைப்படங்கள்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக இயக்குனர் சுதா கொங்கரா தனது சமூக வலைத்தளத்தில்

கூடிய சீக்கிரம் ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் தர்றேன்.. அதுவரைக்கும் Wait and Watch: 'பிரதர்' டீசர்..!

ஜெயம் ரவி நடித்த 'பிரதர்' என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கின்ற நிலையில், இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கே பாலசந்தர் குறித்து அவதூறு பேச்சு.. கண்டனம் தெரிவித்த  இயக்குனர் சங்கத்திற்கு கண்டனம் தெரிவித்த சுசித்ரா..!

மறைந்த இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாடகி சுசித்ராவுக்கு இயக்குனர் சங்கம் கண்டனம் தெரிவித்த நிலையில், நானும் இயக்குனர் சங்கத்திற்கு

'பாட்ஷா' படத்திற்கு சம்பளம் குறைத்து கொடுத்தார்.. அதன் பின் நடந்தது என்ன? வைரமுத்து..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' படத்திற்கு தான் பாட்டு எழுதிய போது சம்பளம் குறைத்துக் கொடுத்ததாகவும் அதன் பின் நடந்தது என்ன என்பது குறித்து பாடலாசிரியர் வைரமுத்து