234ஐ 100ஆக மாற்றிய விஜய்.. உறுப்பினர்களை சேர்க்க செயலி.. வேற லெவலில் தவெக..!

  • IndiaGlitz, [Thursday,February 22 2024]

தளபதி விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சியின் முதல் கூட்டம் பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடந்ததாகவும் அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு செயலி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அதிக உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு நிர்வாக பொறுப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உறுப்பினர்கள் சேர்க்கைக்கு என செயலி மூலம் நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட எண் வழங்கப்படும் என்றும், அந்த எண் மூலம் உறுப்பினர்களை சேர்க்கலாம் என்றும் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி அடுத்த வாரம் அறிமுகம் செய்ய தமிழக வெற்றி கழகம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாக பிரித்து பொறுப்புகள் வழங்க தமிழக வெற்றி கழகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் பத்து நாட்களில் வெளியாகும் என்றும் பொறுப்பாளர் நியமனத்திற்கு பிறகு உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு செயலி அறிமுகம் செய்யப்படும் என்றும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில் விஜய் தனது அரசியல் கட்சியை தொழில்நுட்பத்தின் உதவியுடன் வேற லெவலில் மக்களை சென்றடைய திட்டமிட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

More News

நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்: ஏ.வி.ராஜூவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய த்ரிஷா

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் அதிமுக பிரமுகர் ஏ.வி ராஜூவுக்கு த்ரிஷா தரப்பில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: திமுக அரசுக்கு எதிரான மனு விசாரணை!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. 

தனுஷுக்கு செம்ம டஃப் கொடுப்பார் போல தெரியுதே.. மாறி மாறி நன்றி சொன்ன எஸ்.ஜே.சூர்யா..!

தனுஷ் நடித்து இயக்கும்  50-வது திரைப்படமான 'ராயன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த எஸ்ஜே சூர்யாவின் போஸ்டர் நேற்று வெளியாகி இணையத்தில்

வேற லெவலில் சமந்தாவின் உடல்நிலை.. ரித்திகா சிங்கிற்கு போட்டியா?

நடிகை சமந்தா வேற லெவலில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய்க்கு அரசியல் ஆலோசனை சொல்வாரா பிரசாந்த் கிஷோர்? அவரே அளித்த பதில் இதுதான்..!

தளபதி விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில் அவர் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும்