'நா ரெடி தான் வரவா? 'லியோ' பாடலின் சூப்பர் புரமோ வீடியோ..!

  • IndiaGlitz, [Tuesday,June 20 2023]

தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் ’நா ரெடி’ என்ற பாடல் வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாளின் போது வெளியாக இருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த பாடலின் புரோமோ வீடியோவை படக்குழுவினர்கள் சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. நாம் எதிர்பார்த்தது போலவே இந்த பாடலை தளபதி விஜய், அனிருத் மற்றும் அசல் கோலார் ஆகிய மூவரும் இணைந்து பாடியுள்ளனர். மேலும் இந்த பாடலை விஷ்ணு என்பவர் எழுதியுள்ளார்.

இந்த பாடலின் புரோமோ வீடியோ அசத்தலாக இருக்கும் நிலையில் முழு பாடல் நிச்சயம் ஆட்டம் போட வைக்கும் நிலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த பாடல் 2000 நடன கலைஞர்களுடன் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டது என்று கூறப்பட்டிருப்பதால் இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் - அனிருத் காம்பினேஷன் என்றாலே அந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகும் என்ற நிலையில் இந்த பாடலும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடலின் முதல் நான்கு வரிகள் இதோ:

நான் ரெடிதான் வரவா
அண்ணன் நான் இறங்கி வரவா
தேள் கொடுக்கு சிங்கத்தை சீண்டாதப்பா
எவனாலும் என் ரூட்டு மாறாதப்பா

More News

'லியோ' இசை வெளியீடு.. தயாரிப்பாளர் கொடுத்த தரமான அப்டேட்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர் லலித் தெரிவித்துள்ளார்.

செம்ம கெட்டப்பில் ராகவா லாரன்ஸ் - கங்கனா ரனாவத்.. 'சந்திரமுகி 2' படத்தின் சூப்பர் ஸ்டில்..!

ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் 'சந்திரமுகி 2' படத்தின் சூப்பர் ஸ்டில் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஃபாரின் ஹீரோயின் மாதிரி இருக்கீங்க.. ரம்பாவின் 'அழகிய லைலா' பாட்டுக்கு செம டான்ஸ் ஆடும் விஜே..

'உள்ளத்தை அள்ளித்தா' என்ற திரைப்படத்தில் நடிகை ரம்பா டான்ஸ் ஆடிய 'அழகிய லைலா' என்ற பாடலுக்கு விஜே அஞ்சனா ரங்கன் செம டான்ஸ் ஆடி உள்ள வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.

காதலில் எதிரியே இதுதாங்க… ஏற்கனவே கமிட்டான நடிகை ரகுல் ப்ரீத் சிங் அளித்த விளக்கம்!

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழி திரைப்படங்களில் நடித்து தற்போது இந்தியா முழுக்கவே பிரபலமாகி வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்

திமுக-காங். கூட்டணியில் விஜய்யை இணைத்துக்கொள்ள தயார்: நடிகர் - காங்கிரஸ் எம்பி பேட்டி..!

நடிகர் விஜய் இன்னும் அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, அரசியல் கட்சியும் அதிகாரபூர்வமாக தொடங்கவில்லை, ஆனால் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தால் திமுக -