ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு.. கேட்டாலே அதிரும் பார் உனக்கு: 'நா ரெடி' பாடல் வீடியோ..!

  • IndiaGlitz, [Thursday,June 22 2023]

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படத்தின் ’நா ரெடி’ என்ற பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அந்த பாடல் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

விஜய், அனிருத் மற்றும் அசல் கோலார் பாடிய இந்த பாடலை விஷ்ணு எடாவன் எழுதியுள்ளார் என்பதும் அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடல் முதல் முறை கேட்கும் போது எழுந்து ஆட வைக்கும் அளவுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலில் உள்ள ஒவ்வொரு வரிகளும் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் அளவில் உள்ளது என்பதும் அதேபோல் ஆயிரக்கணக்கான நடன கலைஞர்கள் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காண்பதற்கு பிரம்மாண்டமாக இருக்கும் இந்த பாடல் நிச்சயம் திரையரங்கில் திரையிடும்போது எந்த ஒரு விஜய் ரசிகரும் இருக்கையில் உட்கார்ந்து இருக்க மாட்டார் என்பது உறுதி.

மொத்தத்தில் ஜாலியாக இந்த ’நா ரெடி’ பாடலுடன் டியோ திரைப்படம் ஆரம்பமாகும் என்பதும் அதன் பிறகு படிப்படியாக ஆக்‌ஷன் பக்கம் திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று விஜய் பிறந்தநாளில் விஜய் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இந்த பாடல் அமைந்துள்ளது என்பது அனைவருக்கும் திருப்தியே.

More News

'தேஜாவு' இயக்குனரின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்..!

'தேஜாவு' இயக்குனரின் அடுத்த படமான 'தருணம்" திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயகாந்த் மாதிரி வேற லெவலில் பேக்‌ஷாட்.. திஷா பதானியின் வீடியோ வைரல்..!

சூர்யா நடித்து வரும் 'கங்குவா' படத்தின் நாயகி திஷா பதானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜயகாந்த் மாதிரி பேக் ஷாட் அடிக்கும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக் கமெண்ட்

2 படங்களில் நடித்து முடித்துவிட்ட ரஜினிகாந்த்.. அடுத்த படத்தின் படப்பிடிப்பு எப்போது?

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' மற்றும் 'லால் சலாம்' ஆகிய இரண்டு படங்களில் தனது பகுதியின் படப்பிடிப்பை முடித்துவிட்ட நிலையில் அடுத்ததாக விரைவில் 'ஜெய்பீம்' இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில்

ஒவ்வொரு மாவட்டத்தில் இரவு பள்ளிக்கூடம்: விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு..!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இரவு பாடசாலை திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் பேட்டி அளித்துள்ளார்.

'என்ன நண்பா ரெடியா? 'நா ரெடி' பாடல் ரிலீஸ் ஆகும் நேரம் இதுதான்..!

இன்று தளபதி விஜய் பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவர் நடித்து வரும் 'லியோ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கிள் பாடல் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பதை பார்த்தோம்.