'வாரிசு' படத்துடன் மோதிய பிரபல நடிகரின் படம்.. மீண்டும் 'லியோ'வுடன் மோதல்..!

  • IndiaGlitz, [Saturday,July 22 2023]

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ படத்தின் ரிலீஸ் போது பிரபல நடிகரின் படம் ரிலீஸ் ஆன நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் ’லியோ’ படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் அதே நடிகரின் படம் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் உருவான ’வாரிசு’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியானது. இந்த நிலையில் ஜனவரி 12ஆம் தேதி என்டிஆர் பாலகிருஷ்ணா நடித்த ’வீரசிம்ஹா ரெட்டி’ என்ற திரைப்படம் வெளியானது என்பதும் இதனால் தெலுங்கு மாநிலங்களில் ’வாரிசு’ படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் என்டிஆர் பாலகிருஷ்ணா நடிக்கும் படம் அதே தேதியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

என்டிஆர் பாலகிருஷ்ணா தற்போது ’பகவந்த் கேசரி’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி தசரா விடுமுறையின் போது வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் விஜய் மற்றும் என்டிஆர் பாலகிருஷ்ணா படங்கள் மோத உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News

சூர்யாவின் 'கங்குவா' கிளிம்ப்ஸ் வீடியோ இத்தனை மொழிகளிலா? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நாளை சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட இருப்பதை அடுத்து அவர் நடித்து வரும் 'கங்குவா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த கிளிம்ப்ஸ் வீடியோ ஆறு மொழிகளில்

நீச்சல்குளத்தில் என்ன ஒரு ஜாலி.. மஞ்சிமா மோகனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை மஞ்சிமா மோகன்  திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார் என்பதும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் சுமார் 2 மில்லியன் ஃபாலோயர்கள்

லைக்கா தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' பட முக்கிய அப்டேட்

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'சந்திரமுகி 2' படத்தை பற்றிய

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள்.. லீக் ஆன பட்டியல்.. பெண் டிரைவர் ஷர்மிளா உண்டா?

விஜய் டிவியில் பிக்பாஸ் 7வது சீசன் இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது போட்டியாளர்களுக்கான ஆடிஷன் நடைபெற்று வருவதாகவும் இந்த

ஏமாத்துறது தப்பில்ல.. ஏமாறுவது தான் தப்பு: சதீஷின் 'வித்தைக்காரன்' டீசர்..!

தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான சதீஷ் நாயகனாக நடித்த 'நாய் சேகர்' மற்றும் 'ஓ மை கோஸ்ட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் முக்கிய இடத்தில் நடித்துள்ள