3 மாதங்களுக்கு முன்பே முழுவதுமாக முடிந்த வியாபாராம்.. பக்கா பிளானுடன் 'லியோ' தயாரிப்பாளர்..!

  • IndiaGlitz, [Wednesday,July 19 2023]

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்றும் இதனை அடுத்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே வியாபாரமும் தொடங்கி விட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது தமிழக ரிலீஸ் உரிமை தவிர மற்ற அனைத்து வியாபாரமும் முழுமையாக முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.


‘லியோ’ படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமை, சாட்டிலைட் ரிலீஸ் உரிமை, ஆடியோ மற்றும் ஹிந்தி சாட்டிலைட் ரிலீஸ் உரிமை, ஹிந்தி திரையரங்குகள் உரிமை, கேரளா கர்நாடகா மற்றும் தெலுங்கு மாநிலங்களின் ரிலீஸ் உரிமை மற்றும் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை, என அனைத்து வியாபாரங்களும் 3 மாதங்களுக்கு முன்பே பக்காவாக முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன

இன்னும் தமிழக ரிலீஸ் உரிமை மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டியது உள்ளது என்றும் இதை இதற்காக மிகப்பெரிய நிறுவனம் ஒன்றுடன் தயாரிப்பாளர் லலித் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

அக்டோபர் 19ஆம் ரிலீஸ் ஆகும் ‘லியோ’ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

சுப்ரமணியபுரம்- பட நடிகை சுவாதி விவாகரத்து செய்கிறாரா? தீயாய் பரவும் தகவல்

சசிக்குமார் இயக்கத்தில் நடிகர் ஜெய் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படமான

யூடியூப் பார்த்து பல் வலிக்கு வைத்தியம் செய்த இளைஞர்… பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…!

ஜார்கண்ட் மாநிலத்தில் போட்டித் தேர்வுகளுக்காக படித்துவந்த இளைஞர் ஒருவர் பல் வலிக்கு வைத்தியம் செய்வதற்காக யூடியூப் பார்த்து அரளி விதைகளை அரைத்துச் சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம்

லோகேஷ் கனகராஜின் அடுத்த ஐந்து படங்கள் இவை தான்..! 4 வருடங்கள் பிசியா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜய் நடித்த 'லியோ' என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல் இணையத்தில் கசிந்து வருகின்றன

'லால் சலாம்' நடிகைக்கு ஒரு ஆண்டு ஜெயில்.. கணவருக்கும் சிறை தண்டனை..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'லால் சலாம்' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை மற்றும் அவரது கணவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

த்ரிஷாவை போல் நெஞ்சில் டாட்டூ குத்திய பிக்பாஸ் ரக்சிதா.. என்ன டாட்டூ தெரியுமா?

நடிகை த்ரிஷாவை போல் நெஞ்சில் டாட்டூ  குத்திய புகைப்படத்தை பிக் பாஸ் ரக்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.