6 வாரங்களுக்கு முன்பே முன்பதிவு.. வெளிநாட்டில் 'லியோ' செய்யும் சாதனை..!

  • IndiaGlitz, [Sunday,August 27 2023]

தளபதி விஜய் நடித்த ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மேலும் இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி ஆயுதபூஜை விடுமுறை தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பதும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஏற்கனவே வெளியாகியது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ‘லியோ’ படம் வெளியாகும் தேதியிலிருந்து ஆறு வாரங்களுக்கு முன்பே பிரிட்டனில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு இந்திய திரைப்படம், ஆறு வாரங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யப்படுவது இதுதான் முதல் முறை என்ற சாதனையை ‘லியோ’ திரைப்படம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனை போலவே வேறு சில நாடுகளிலும் முன்கூட்டியே முன்பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த படத்தின் முன்பதிவு அக்டோபர் முதல் வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா வரலாற்றில் ‘லியோ’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்யும் என்றும் கூறப்படுகிறது

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

 

More News

'லியோ' ஆடியோ லான்ச் நிலாவுல நடக்கும்.. ரஜினியை நினைச்சா கேவலமா இருக்குது: மன்சூர் அலிகான் பேட்டி..!

 'லியோ' படத்தின் ஆடியோ லான்ச் நிலாவில் சந்திராயன் அருகில் நடக்கும் என்றும் ரஜினிகாந்த்,  உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது கேவலமாக இருக்கிறது என்றும் நடிகர் மன்சூர் அலிகான்

குழந்தைகளுடன் சைக்கிள் ரைட் செய்த அஜித்.. வைரல் வீடியோ..!

நடிகர் அஜித் ஒரு மோட்டார் பைக் ரைடர் என்பதும் கார் ரேஸில் ஈடுபடுவதில் வல்லவர் என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் அவர் குழந்தைகளுடன் சைக்கிள் ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது  

சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் வியக்க வைத்த லைக்கா சுபாஷ்கரன்

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வரும் 'சந்திரமுகி 2' எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி கொடுத்த சுபாஷ்கரன்..!

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான 'சந்திரமுகி 2' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் லைகா நிறுவனத்தின் சேர்மன் சுபாஷ்கரன் கலந்து கொண்டார்.

இதில் யார் உண்மையான மகாலட்சுமி? விஜயகுமார் மகளின் க்யூட் புகைப்படங்கள்..!

நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் ஸ்ரீதேவி விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சுமி கடாட்சமாக போட்டோஷூட் புகைப்படங்கள வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது