லண்டன் பேருந்தில் விஜய்யின் 'லியோ' விளம்பரம்.. வேற லெவல் எதிர்பார்ப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு வேற லெவல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழகத்திற்கு இணையாக வெளிநாட்டிலும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் அக்டோபர் 19 முதல் 22 வரை ‘லியோ’ படத்தின் 50 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் இந்த படம் இங்கிலாந்து உட்பட உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூலை அள்ளிக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் டிக்கெட் விற்பனையில் இங்கிலாந்து நாட்டின் விஜய் ரசிகர்கள் சாதனை செய்துள்ள நிலையில் அந்நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள பேருந்தில் ‘லியோ’ திரைப்படத்தின் விளம்பரம் செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
‘லியோ’ திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கிய அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வேற லெவலில் புரமோஷன் செய்து வருகிறது என்பது இந்த வீடியோவின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Ivan vettaikku setharanum bayandhu! Even after selling over 50,000 tickets for Oct 19-22, the #LEO hype isn’t slowing down. More shows and theatres — on the way 💥💥💥
— Ahimsa Entertainment (@ahimsafilms) October 8, 2023
Book UK tickets 👉 https://t.co/KYkytsJ4VT pic.twitter.com/lU23bTFHl0
#thalapathi vijay in #leo advertisement in London bus.. vera level promotion pic.twitter.com/xjYMRoOyDV
— Chinna Chinna Asai (@chennaitodaynew) October 10, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com