கணவர், குழந்தைகளுடன் விஜய்யின் 'காவலன்' பட நடிகை: 8வது திருமண நாள் கொண்டாட்டம்!
- IndiaGlitz, [Saturday,May 29 2021]
தளபதி விஜய் மற்றும் அசின் நடித்த வெற்றிப் படமான ‘காவலன்’ திரை படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக காமெடி வேடத்தில் நடித்தவர் நடிகை நீபா. இந்த படத்தை அடுத்து அவர் ஒருசில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் சமூக வலைதளத்திலும் ஆக்டிவ்வாக இருக்கிறார் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை நீபா கடந்த 2013 ஆம் ஆண்டு தொழிலதிபர் சிவகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் சிவகுமார்-நீபா தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகை நீபா தனது எட்டாவது திருமண நாளைக் கொண்டாடியதை அடுத்து இதுகுறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருவதோடு சிவகுமார்-நீபா தம்பதிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.