'சின்ன சின்ன கண்கள்' பாடல்.. விஜய்யுடன் பாடியது இந்த பிரபலமா? எதிர்பார்க்கவே இல்லை..!

  • IndiaGlitz, [Friday,June 21 2024]

தளபதி விஜய் நடித்த ’கோட்’ படத்தின் ’சின்ன சின்ன கண்கள்’ என்ற செகண்ட் சிங்கிள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த பாடலை தளபதி விஜய் பாட உள்ளார் என்று அறிவிப்பும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலையும் விஜய் பாடிய நிலையில் இரண்டாவது சிங்கிள் பாடலையும் அவரே பாடியுள்ளார் என்பதை அடுத்து பல வருடங்களுக்கு பிறகு அவர் ஒரே படத்தில் இரண்டு பாடல்களை பாடி உள்ளார் என்பதும் இது ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’சின்ன சின்ன கண்கள்’ பாடலின் 29 நொடி டீசரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள நிலையில் அந்த டீசரில் விஜய்யுடன் பாடியது மறைந்த இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி என்று அறிவித்துள்ளது தான் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பவதாரணி குரலை ஏஐ டெக்னாலஜி மூலம் ஒரு பாடலுக்கு பயன்படுத்த வெங்கட் பிரபு திட்டமிட்டு இருந்ததாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையில், கபிலன் வைரமுத்து பாடல் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் மெலோடி பாடலாக அமைந்துள்ளது என்பதும் முதல் முறை கேட்கும் போதே இந்த பாடல் அனைத்து தரப்பையும் கவரும் வகையில் ஒரு இசை விருந்தாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 29 வினாடி டீசரே மனதை கவரும் வகையில் இருக்கும் நிலையில் முழு பாடல் எப்படி இருக்கும் என்பதை அறிய நாளை வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.