விஜய்யின் முதல் தீபாவளி திரைப்படம்: பிக்பாஸ் நடிகையின் மலரும் நினைவு

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் தீபாவளி விருந்தாக நேற்று வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகின்றது. இதற்கு முன் பல ஆண்டுகள் தீபாவளி அன்று விஜய்யின் படங்கள் வெளியாகியுள்ளது. உதாரணமாக ஷாஜகான், திருமலை, கத்தி , மெர்சல், சர்க்கார் போன்ற படங்கள் விஜய்யின் தீபாவளி படங்களில் சில என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய் நடித்த படம் முதல் தீபாவளி என்ற பெருமையை பெற்ற படம் சந்திரலேகா. இந்த படத்தின் நாயகியும் பிக் பாஸ் 3 போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா விஜயகுமார் இதன் மலரும் நினைவாக தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: 24 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யின் முதல் தீபாவளி ரிலீஸ் என்னுடன் நடித்த சந்திரலேகா தான். நாங்கள் இருவரும் பின்நோக்கி போய் எங்களுடைய அழகான நினைவுகளை பகிர்ந்து கொள்கிறோம். விஜய்யின் ஹீரோயின் நான் என்பதில் எனக்கு பெருமை, என குறிப்பிட்டுள்ளார்.

வனிதா விஜயகுமாரின் இந்த டுவிட்டுக்கு நெட்டிசன்கள் வழக்கம்போல் ஆதரவு மற்றும் கிண்டலுடன் கூடிய எதிர்ப்பு கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.
 

More News

'கைதி'யை அடுத்து 'கைதி 2': உறுதி செய்த கார்த்தி

கோலிவுட் திரையுலகில் ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்குவது என்பது கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்கமாக உள்ளது.

'பிகில்' படத்திற்கு முந்தைய பகுதி! அட்லியின் பதில்!

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'பிகில்' திரைப்படம் நேற்று வெளியாகி

என் குழந்தையை எப்படியாவது காப்பாத்துங்க! பெண் எம்பியிடம் கதறியழுத தாய்

நேற்று மாலை 5.30 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சுர்ஜித் என்ற குழந்தையை மீட்க கடந்த 24 மணி நேரமாக மீட்புக்குழுவினர் போராடி வருகின்றனர்.

70-75 அடி ஆழத்திற்கு சுரங்கம்; சுர்ஜித்தை மீட்க அடுத்த முயற்சி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இரண்டு வயது குழந்தையான சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை கீழே விழுந்த நிலையில், அந்த குழந்தையை மீட்க கடந்த பல மணி நேரமாக

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித் குறித்து லதா ரஜினிகாந்த்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சரியாக 24 மணி நேரம் முடிந்துவிட்டது. நேற்று மாலை 5.30க்கு ஆழ்துளை கிணற்றில்