தவெக கொடியேற்றும் விழாவில் விஜய்யின் அப்பா-அம்மா வருகை.. மனைவி குழந்தைகள் வரவில்லையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி இன்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த விழாவில் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் அம்மா ஷோபா ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். கொடியேற்றிய பின் விஜய், தந்தை தாய் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
ஆனால் அதே நேரத்தில் இந்த விழாவில் விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் மகன், மகள் ஆகிய மூவருமே வரவில்லை என்று கூறப்படுகிறது. விஜய் - சங்கீதா குறித்து ஏற்கனவே சில வதந்திகள் பரவி வரும் நிலையில் சங்கீதா இந்த விழாவுக்கு வராமல் இருந்தது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்க்கும் அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகர் அவர்களுக்கும் பிரச்சனை இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இந்த விழாவில் விஜய் தந்தை கலந்து கொண்டதை அடுத்து இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் தற்போது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இந்த விழாவில் கலந்து கொள்ளாதது பல்வேறு யூகங்களை எழுப்பினாலும் தனது குடும்பத்தை அரசியல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்று விஜய் நினைத்திருக்கலாம் என்றும் வேறு எதுவும் பெரிதாக காரணம் இருக்க வாய்ப்பில்லை என்றும் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments