ரூ.200 கோடியை நெருங்கும் 'பிகில்' வசூல்

  • IndiaGlitz, [Wednesday,October 30 2019]

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் தீபாவளி விருந்தாக அக்டோபர் 25ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த படம் வெளியான வெள்ளிக்கிழமை மற்றும் தீபாவளி விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நான்கு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.130 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக விநியோகிஸ்தர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்தது.

பிகில் திரைப்படம் நேற்று வரை அதாவது ஐந்து நாட்களில் உலகம் முழுவதும் ரூ.190 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் ரூ.200 கோடி கிளப்பில் இந்த படம் இணைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

ஐந்தே நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.89 கோடி இந்த படம் வசூல் செய்துள்ளது. அதில் சென்னையில் ரூ.7.82 கோடி வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆந்திராவில் ரூ.14 கோடியும், கேரளாவில் ரூ.13 கோடியும், கர்நாடகாவில் ரூ.12 கோடியும், வட இந்தியாவில் ரூ.3 கோடியும் இந்த படம் வசூல் செய்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் மட்டும் இந்த படம் 60 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் ரூ.14 கோடியும், அமெரிக்காவில் ரூ.7 கோடியும், பிரிட்டனில் ரூ.5 கோடியும், சிங்கப்பூரில் ரூ.6 கோடியும், மலேசியாவில் ரூ.8 கோடியும், ஆஸ்திரேலியாவில் ரூ.3 கோடியும் பிகில் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் தளபதி விஜய் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை பிகில் படத்தின் வசூல் நிரூபித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

'கைதி' படத்தின் ஆச்சரியமான வசூல் விபரங்கள்

விஜய் நடித்த பிகில் என்ற பெரிய பட்ஜெட் படத்துடன் கடந்த தீபாவளி தினத்தில் துணிச்சலுடன் வெளியான 'கைதி' படக்குழுவினர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் ஆச்சரியத்தக்க வசூலை பெற்று வருகிறது.

இயக்குனர் பாரதிராஜா வீட்டில் ஒரு கிலோ வெள்ளி திருட்டு!

இயக்குனர் இமயம் பாரதிராஜா வீட்டில் ஒரு கிலோ வெள்ளி உள்பட லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரொக்கம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பிரபல வெற்றிப்பட நடிகருக்கு ஆண் குழந்தை!

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த 'கேஜிஎப்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

பொங்கல் ரிலீஸ் பட்டியலில் இணைகிறதா விஜய்சேதுபதியின் படம்?

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த 'சங்கத் தமிழன்' திரைப்படம் வரும் நவம்பர் இரண்டாம் வாரம் வெளியாக உள்ள நிலையில் அவர் தற்போது சுமார் அரை டஜனுக்கும் அதிகமான படங்களில் நடித்து வருகிறார்.

'வலிமை' நாயகி நஸ்ரியாவா? அவரே அளித்த விளக்கம்!

அஜித் நடிக்கவிருக்கும் 60வது திரைப்படமான 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது