close
Choose your channels

செகண்ட் லுக்கில் நான்கு கெட்டப்: பட்டைய கிளப்பும் 'பிகில்'

Saturday, June 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று தளபதி விஜய்யின் பிறந்த தினம் என்பதால் இன்றைய நாள் ஆரம்பிக்கும் 12.00 மணிக்கு அவர் நடித்து வரும் 'பிகில்' படத்தின் இரண்டாவது லுக் வெளியாகியுள்ளது. நேற்று வெளியான ஃபர்ஸ்ட்லுக்கின் பரபரப்பே சமூகவலைத்தளங்களில் இன்னும் வெறித்தனமாக இருந்து வரும் நிலையில் இன்று வெளியாகியுள்ள செகண்ட்லுக் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

இந்த செகண்ட்லுக்கில் 'பிகில்' படக்குழுவினர் இறங்கி அடித்துள்ளனர். விஜய்யின் நான்கு கெட்டப் இந்த லுக்கில் உள்ளது. ஒன்று விஜய்யின் 'மைக்கேல்' கேரக்டர் கால்பந்து விளையாடும் இளமையான காலகட்டம், மற்றொன்று கால்பந்து பயிற்சியாளரான 'மைக்கேல்' லுக், அடுத்ததாக கோட், சூட் போட்டு ஸ்டைலான ஒரு லுக், நான்காவதாக 'பிகில்' விஜய்யின் லுக் என இந்த செகண்ட்லுக் தெறிக்க வைத்துள்ளது.

மேலும் இந்த லுக்கில் 'AND THE NAME IS' என்ற வார்த்தைகள் பின்னணியில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 'பிகில்' விஜய் கேரக்டர் ஒரு முக்கிய விஷயத்தை வெளிப்படுத்துகிறது. காவி வேஷ்டி, நெற்றியில் குங்குமம், விபூதியுடன் இருக்கும் இந்த கேரக்டரின் கழுத்தில் சிலுவை செயின் இருப்பது பல்வேறு ஊகங்களை ஏற்படுத்துகிறது. இந்த விஷயம் சர்ச்சைக்குள்ளானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் விஜய் படத்தை பொருத்தவரையில் சர்ச்சைகளும் வெற்றியாகத்தான் மாறியுள்ளது என்பது 'மெர்சல்' மற்றும் 'சர்கார்' படங்களில் நாம் பார்த்த உண்மை. மொத்தத்தில் விஜய்யின் பிறந்த நாளில் படக்குழுவினர் ஒரு 'செம' விருந்து கொடுத்துள்ளனர். இந்த விருந்து அடுத்ததாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் வரை தாக்குப்பிடிக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment