கொரோனா பாதிப்புக்கு பின் 'பிகில்' படத்தை ரீரிலீஸ் செய்யும் 4வது நாடு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக உலகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது என்பதும் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நாடுகளில் படிப்படியாக திரையரங்குகள் திறக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் ரிலீஸ் செய்ய புதிய திரைப்படங்கள் இல்லை என்பதும், அதனால் போதுமான ரசிகர்கள் வராததால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனை அடுத்து திரையரங்குகளுக்கு ரசிகர்களை வரவழைக்கும் வகையில் சூப்பர்ஹிட் படங்களை ரீரிலீஸ் செய்யும் திட்டத்தை திரையரங்கு உரிமையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் விஜய்யின் ’பிகில்’ திரைப்படம் சமீபத்தில் ரீரிலீஸ் செய்யப்பட்டது.

இதனையடுத்து தற்போது ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் இலங்கையிலும் திரையரங்குகள் திறக்கப்படவுள்ள நிலையில் அங்கும் ‘பிகில்’ திரைப் படத்தை ரீரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து திரையரங்குகள் திறக்கப்படும் நிலையில் விஜய் போன்ற மாஸ் நடிகர்களின் படங்களை வெளியிட்டால் மட்டுமே திரையரங்குகளில் கூட்டம் கூடும் என்பதால் விஜய்யின் பிகில், மெர்சல், சர்க்கார் போன்ற திரைப்படங்களை ரீரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.