'பிகில்' படத்தின் அடுத்த அப்டேட்: அள்ளி வழங்கும் அர்ச்சனா

  • IndiaGlitz, [Saturday,June 22 2019]

விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் ஒரே ஒரு அப்டேட்டை கேட்டு விஜய் ரசிகர்கள் அந்த படத்தின் தயாரிப்பாளரிடம் கடந்த வாரம் வரை கெஞ்சி கொண்டிருந்தனர். ஒரு அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு நேற்று இரண்டு அப்டேட்டுக்களை கொடுத்தார் அர்ச்சனா கல்பாதி. நேற்று மாலை 6 மணிக்கு ஃபர்ஸ்ட்லுக் மற்றும் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு செகண்டு லுக் என கொடுத்து விஜய் ரசிகர்களை முழு அளவில் திருப்தி செய்தார்

இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மீண்டும் 'பிகில்' படம் குறித்த ஒரு அப்டேட் அளிக்கவுள்ளதாக சற்றுமுன் அர்ச்சனா கல்பாதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். எதிர்பார்க்காத ஒன்றை எதிர்பாருங்கள். வாழ்க்கையில் உங்களை ஆச்சரியப்படுத்த அற்புதமான விஷயங்கள் இன்று மாலை 6 மணிக்கு காத்திருக்கின்றன' என்று குறிப்பிட்டுள்ளார்.

'பிகில் படம் குறித்த அப்டேட்டுக்களை அள்ளி வழங்கி வரும் அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர். ஒருசிலர் உங்களை போய் தவறாக பேசிவிட்டோம், மன்னித்து விடுங்கள் என்றும் கூறி வருகின்றனர். இன்று மாலை விஜய் ரசிகர்களூக்கு காத்திருக்கும் ஆச்சரியம் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

மீம் கிரியேட்டர்ஸ்களை கூவிக்கூவி அழைத்த பிக்பாஸ் கமல்!

தொலைக்காட்சி நேயர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை முதல் தொடங்கவுள்ளது. மீண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில்

'நேர் கொண்ட பார்வை' படத்தில் நடிக்காதது ஏன்? டாப்ஸி விளக்கம்

அமிதாப் நடித்த 'பிங்க்' திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் இந்த படம் தான் பாலிவுட்டில் நடிகை டாப்ஸியை முன்னணி நடிகையாக்க உதவியது.

துணை முதல்வருடன் பாண்டவர் அணி சந்திப்பு: 

நடிகர் சங்க தேர்தலை நாளை நடத்தலாம் என்றும், ஆனால் தேர்தலில் பதிவான வாக்குகள் நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை எண்ணக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டிருக்கும்

தளபதி' விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய 'தளபதி'யின் சகோதரர்

இளையதளபதியாக இருந்த விஜய், மெர்சல்' படத்தில் தளபதி என்ற கேரக்டரில் நடித்த பின்னர் அவரை அவரது ரசிகர்கள் தளபதி என்றே அழைத்து வருகின்றனர்.

நடிகர் சங்க தேர்தலை நடத்தலாம்! ஆனால்... நீதிமன்றம் உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நிறுத்த பதிவாளருக்கு அதிகாரம் இல்லை என்றும், தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் விஷால் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு