'பிகில்' படத்தின் அடுத்த அப்டேட்: அள்ளி வழங்கும் அர்ச்சனா
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் ஒரே ஒரு அப்டேட்டை கேட்டு விஜய் ரசிகர்கள் அந்த படத்தின் தயாரிப்பாளரிடம் கடந்த வாரம் வரை கெஞ்சி கொண்டிருந்தனர். ஒரு அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு நேற்று இரண்டு அப்டேட்டுக்களை கொடுத்தார் அர்ச்சனா கல்பாதி. நேற்று மாலை 6 மணிக்கு ஃபர்ஸ்ட்லுக் மற்றும் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு செகண்டு லுக் என கொடுத்து விஜய் ரசிகர்களை முழு அளவில் திருப்தி செய்தார்
இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மீண்டும் 'பிகில்' படம் குறித்த ஒரு அப்டேட் அளிக்கவுள்ளதாக சற்றுமுன் அர்ச்சனா கல்பாதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். எதிர்பார்க்காத ஒன்றை எதிர்பாருங்கள். வாழ்க்கையில் உங்களை ஆச்சரியப்படுத்த அற்புதமான விஷயங்கள் இன்று மாலை 6 மணிக்கு காத்திருக்கின்றன' என்று குறிப்பிட்டுள்ளார்.
'பிகில் படம் குறித்த அப்டேட்டுக்களை அள்ளி வழங்கி வரும் அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர். ஒருசிலர் உங்களை போய் தவறாக பேசிவிட்டோம், மன்னித்து விடுங்கள் என்றும் கூறி வருகின்றனர். இன்று மாலை விஜய் ரசிகர்களூக்கு காத்திருக்கும் ஆச்சரியம் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Expect the unexpected. Life is full of wonderful things waiting to surprise you 6:00 pm #Bigil ????
— Archana Kalpathi (@archanakalpathi) June 22, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com