விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்: பூ தொழிலாளர்கள் போராட்டம்

  • IndiaGlitz, [Monday,October 21 2019]

கடந்த சில வருடங்களாக விஜய் படம் பிரச்சனை இன்றி வெளியானதாக சரித்திரம் இல்லை. அந்த வகையில் 'பிகில்' திரைப்படமும் ஆரம்பித்ததில் இருந்தே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன

குறிப்பாக 'பிகில்' படத்தின் ஆடியோ விழாவிற்கு பின் வரிசையாக பல்வேறு பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றது. பிகில் படத்தின் கதை தன்னுடையது என செல்வா என்பவர் வழக்கு தொடுத்திருக்கும் நிலையில், இறைச்சி வியாபார சங்கத்தினர், 'பிகில்' படத்தின் பர்ஸ்ட்லுக் குறித்த பிரச்சனையை எடுத்தனர்.

இந்த நிலையில் தற்போது பூ தொழிலாளர்கள் விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். பிகில் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் விஜய் கூறிய ஒரு குட்டிக் கதையில் பூ தொழிலாளியை அவமதிக்கும் வகையில் விஜய் பேசியதாகவும், அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஸ்ரீரங்கம் அண்ணா புஷ்ப தொழிலாளர்கள் சங்க செயலாளர் படையப்பா ரெங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

பிகில் ஆடியோ விழா நடைபெற்று பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது திடீரென பூ தொழிலாளர்களுக்கு ஞானோதயம் வந்தது எப்படி? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

More News

கொள்ளையன் முருகனை நேரில் சந்தித்து நன்றி கூறிய லலிதா ஜூவல்லர்ஸ் உரிமையாளர்

சமீபத்தில் திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் சுவரில் ஓட்டை போட்டு சில கொள்ளையர்கள் கோடிக்கணக்கான நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர் என்பது தெரிந்ததே

கவின் - லாஸ்லியா காதல் வெறும் நடிப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி!

பிக்பாஸ் வீட்டில் நடந்த சுவாரசியமான நிகழ்ச்சிகளில் ஒன்று கவின் - லாஸ்லியா காதல். இந்த காதல் குறித்த புரமோ வீடியோக்களை வெளியிட்டுத்தான் நிகழ்ச்சியை பிரபலப்படுத்தினார்கள். சமூக வலைதளங்களிலும் இந்த காதலுக்கு பெரும் ஆதரவும் இருந்தது

கலைஞானத்தை அடுத்து மேலும் 10 பேர்களுக்கு வீடு கொடுத்த ரஜினிகாந்த்!

பழம்பெரும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரும், ரஜினியை முதன்முதலாக ஹீரோவாக்கியவருமான கலைஞானம் அவர்கள் வாடகை வீட்டில் வசிப்பதாக கேள்விப்பட்ட ரஜினிகாந்த்,

கையில் எப்போதும் குடை வைத்திருங்கள்: தமிழ்நாடு வெதர்மேன் அறிவுரை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17-ஆம் தேதி தொடங்கி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.

புறக்கணிக்கப்படும் தென்னிந்திய திரையுலகம்: பிரதமரிடம் தைரியமாக கூறிய நடிகரின் மனைவி

நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.