தொடங்கியது 'பீஸ்ட்' படப்பிடிப்பு: இன்றைய படப்பிடிப்பில் என்ன காட்சி?

  • IndiaGlitz, [Thursday,July 01 2021]

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கிவரும் ‘பீஸ்ட்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் தொடங்கியதாக தகவல் வெளிவந்துள்ளது.  இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு நாயகி பூஜா ஹெக்டே வந்தார் என்பதும் அவர் சென்னை விமான நிலையத்தில் வந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலானது என்பதையும் பார்த்தோம் 

இந்த நிலையில் இன்று விஜய் மற்றும் பூஜா ஹெக்டே கலந்து கொள்ளும் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மொத்தம் 20  20 நாட்கள் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விஜய் பூஜா ஹெக்டே பாடல் காட்சியை அடுத்து அதிரடி ஸ்டண்ட் காட்சி ஒன்றும் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் பல தளர்வுகளை அறிவித்து வந்த தமிழக அரசு, சமீபத்தில் படப்பிடிப்புகளை நடத்தலாம் என்று அனுமதி வழங்கியதை அடுத்து இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் அபர்ணாதாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ், உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.