காதலரை கைப்பிடித்த நடிகை விஜய், கவின் பட நடிகை: திருமண புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,April 24 2024]

விஜய், கவின் படங்களில் நடித்த நடிகை தனது காதலரை இன்று திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் நடித்த ‘பீஸ்ட்’ கவின் நடித்த ’டாடா’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை அபர்ணாதாஸ் மலையாளத்தில் சில படங்கள் நடித்துள்ளார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் நடிகை அபர்ணாதாஸ் மற்றும் ’மஞ்சம்மெல் பாய்ஸ்’ படத்தில் நடித்த தீபக் பரம்போல் ஆகிய இருவரும் காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் நேற்று ஹல்தி கொண்டாட்டம் நடந்த நிலையில் இன்று திருமணம் சிறப்பாக நடைபெற்ற நிலையில் திருமண புகைப்படங்கள் இருவரது இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த புகைப்படங்களை அடுத்து ரசிகர்கள் இந்த நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த திருமணத்தில் பல மலையாள திரைப்பட பிரபலங்கள் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அபர்ணாதாஸ் - தீபக் ஆகிய இருவரும் மலையாளத்தில் ’மனோகரம்’ என்ற படத்தில் நடித்திருந்த நிலையில் அதன் பின் காதல் வயப்பட்டு தற்போது தம்பதிகள் ஆகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நிழல்கள் ரவி: நீச்சல் தெரியாமல் கடலில் குதித்த அனுபவம்! ரஜினிகாந்த் குதிரை ஓட்டிய ரகசியம்!

பிரபல நடிகர் நிழல்கள் ரவி 'IndiaGlitz'-க்கு அளித்த பேட்டியில் 'நிழல்கள்' படத்திற்கு பின்னர் நடித்த 'மலையாளம்' படத்தில் நீச்சல் தெரியாமல் கடலில் குதித்த

நான் அப்பாவாகிவிட்டேன்.. 'சத்யா' சீரியல் நடிகரின் மகிழ்ச்சியான பதிவு..!

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான 'சத்யா' என்ற சீரியலில் நடித்த நடிகர் தான் அப்பாவாகிவிட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மே 1 முதல் மாற்றம்.. ராகவா லாரன்ஸ் வெளியிட்ட வீடியோ.!

மே 1 முதல் மாற்றம் என்ற சேவை ஆரம்பமாக இருப்பதாக நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இருந்து விலகியே இருந்த குழந்தை நட்சத்திரம் பேபி ஷாமிலி.

மல்லூடி என்ற மலையாள திரைப்படத்தில் ஆழ்துளை கிணற்றில் மாட்டி கொண்ட குழந்தையாக நடித்ததற்காக சிறந்த குழந்தை கலைஞருக்கான கேரளா மாநில திரைப்பட விருதை பெற்ற பேபி ஷாமிலி...

ஆன்மீக பேச்சாளர் விஜய்குமார் ஹோமம் பற்றிய முக்கிய தகவல்கள்!

பிரபல ஆன்மீக பேச்சாளர் விஜய்குமார், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஹோமம் செய்வதன் முக்கியத்துவம், ஹோமம் செய்யும் விதிகள்,