விஜய்யுடன் நடித்த பேபி நட்சத்திரமா இவர்? வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Tuesday,February 23 2021]

தளபதி விஜய் நடித்த திரைப்படம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஒருவரின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

விஜய் நடித்த ’அழகிய தமிழ்மகன்’ என்ற திரைப்படம் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் இந்தப் படத்தில் விஜய்யின் பக்கத்துவீட்டு குழந்தையாக குழந்தை நட்சத்திரம் நிவேதிதா நடித்திருந்தார். இவர் ஏற்கனவே மோகன்லாலின் படங்கள் உள்பட ஒரு சில மலையாள படங்களில் நடித்திருந்த நிலையில் இவர் நடித்த ஒரே தமிழ்ப்படம் ’அழகிய தமிழ் மகன்’ என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் சிறந்த குழந்தை நட்சத்திர விருதை 10 முறை பெற்றுள்ளார் என்பதும், நிவேதிதாவின் சகோதரி நிரஞ்சனாவும் ஒரு நடிகை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நிவேதிதாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்யுடன் நடித்த குழந்தை நட்சத்திரமா இவர்? என்று அனைவரும் ஆச்சரியத்தில் இந்த புகைப்படத்தை லைக் செய்து வருகின்றனர்.