அனிதா வீட்டில் தளபதி விஜய்: குடும்பத்தினர்களுக்கு இரங்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பு படிக்கும் வாய்ப்பை இழந்த அரியலூர் அனிதா, மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இவரது உயிர்த்தியாகம் தற்போது நீட் தேர்வுக்கு எதிரான விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இதனால் தற்போது மாணவர்கள், மாணவிகள் தெருவில் இறங்கி போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் தன்னுடைய இன்னுயிரை நீத்த அனிதாவுக்கு அரசியல் கட்சி தலைவர்களும் திரையுலக பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் இன்று தளபதி விஜய் அவர்கள் அனிதாவின் அரியலூர் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினர்களுடன் தரையில் உட்கார்ந்து அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
ஒரு நடிகராக விஜய்யை பலர் விமர்சனம் செய்யலாம். ஆனால் தன்னுடைய ரசிகர்களாக இருந்தாலும் சரி, சமூக கொடுமையினால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, நேரில் சென்று ஆறுதல் கூறும் வழக்கத்தை கொட்னுள்ள விஜய்யை அவரை வெறுப்பவர்கள் கூட விமர்சனம் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments