ரசிகர்களுக்கு விஜய் பிறப்பித்த அதிரடி உத்தரவு.. இனி எல்லாம் வேற லெவல் தான்..!
- IndiaGlitz, [Monday,April 10 2023]
நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை கட்டுக்கோப்பாக நடத்தி வரும் நிலையில் தற்போது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அதிரடியாக பிறப்பித்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்து ஆலோசனை செய்ய விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய ரசிகர்களை ஒன்றிணைக்கும் விதமாகவும் நலத்திட்ட உதவிகள் செய்து மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் என்ற ரசிகர் மன்றத்தை விஜய் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சில வெற்றி பெற்றனர் என்பதும் வெற்றி பெற்ற அனைத்து கவுன்சிலர்களை நேரில் அழைப்பு விஜய் சில அறிவுரைகள் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் அமைப்பாக வரும் காலத்தில் மாறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடு மற்றும் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்த நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
விஜய் மக்கள் இயக்கத்தின் புஸ்ஸி ஆனந்துக்கு அவர் பிறப்பித்த உத்தரவில் விஜய் மக்கள் இயக்கம் ஆலோசனை கூட்டம் மாவட்ட தோறும் நடத்தப்பட வேண்டும் என்றும் மாவட்டம், நகரம், ஒன்றியம், பகுதி ஆகிய பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் மாவட்ட அளவில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள மகளிர் அணி விவசாய அணி உட்பட அனைத்து அணிகளில் உள்ள நிர்வாகிகள் மாவட்ட அளவில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு விஜய் மக்கள் இயக்கத்தின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்று அவர் கூறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளனர்.
விஜய்யின் இந்த உத்தரவை பார்க்கும்போது விஜய் தனது மக்கள் இயக்கத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார் என்பது தெரிய வருகிறது.