பிறந்த நாள் கொண்டாட்டம்.. விஜய்யின் அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதும் பிறந்த நாளை ஒரு திருவிழா போல் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருவார்கள் என்பதும் தெரிந்தது.
அதேபோல் இந்த ஆண்டும் விஜய்யின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அவரது ரசிகர்கள் திட்டமிட்டனர் என்பதும் ஏற்கனவே அவர் நடித்து ஹிட்டான சில படங்கள் இன்று ரிலீஸ் ஆவதை அடுத்து அந்த படங்களை பார்த்து கொண்டாட திட்டமிட்டு இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திடீரென விஜய் தரப்பில் இந்த ஆண்டு பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு தலைவர் அவர்கள் உத்தரவு!
தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
எனவே தலைவர் அவர்களின் உத்தரவின்படி, கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com