விஜயாவின் ஒரிஜினல் முகத்தை பார்த்த ரோகிணி .. 'சிறகடிக்க ஆசை' சீரியலில் திடீர் திருப்பம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் இதுவரை ரோகிணி, விஜயாவின் அன்பான ஒரு பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இன்று திடீரென அவரது இன்னொரு பக்கத்தை சந்திக்க நேர்ந்த காட்சியின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகிணி என்ற கேரக்டர் பல ஏமாற்று வேலைகளை செய்து வருகிறது என்பதும் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கும் நிலையில் அதை மறைத்து விஜயா வீட்டில் மருமகளாக வந்திருக்கிறார் என்பதும் தெரிந்தது. அதுமட்டுமின்றி பார்லரை விற்று விட்டு அதில் வேலைக்கு இருப்பதை வீட்டில் உள்ளவர்களிடம் மறைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தனது அப்பா மலேசியாவில் ஒரு மிகப்பெரிய பணக்காரர் என்றும் பொய் சொல்லி உள்ளார் என்பதும் இவ்வளவு பிராடு வேலைகளை செய்த ரோகிணி, விஜயாவுக்கு அன்பான மருமகளாக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் நான் கடந்த சில நாட்களுக்கு முன்பே ரோகிணிக்கு அந்த பார்லர் சொந்தமானது இல்லை என்பதை முத்து கண்டுபிடித்து அவரது அப்பா அண்ணாமலை இடம் கூறியிருந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்செயலாக தற்போது ரோகிணி கணவர் மனோஜ் பார்லர் ரோகிணிக்கு சொந்தமில்லை என்பதை கண்டுபிடித்து அவர் தனது அம்மாவிடம் போட்டுக் கொடுத்து விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த விஜயா ரோகிணியிடம் தன்னுடைய இன்னொரு முகத்தை காட்டி திட்டுகிறார். இந்த பார்லர் வைப்பதற்கு நான் தான் வீட்டை அடமானம் வைத்து உனக்கு காசு கொடுத்தேன், என்னை கேட்காமல் நீ எப்படி பார்லரை விற்கலாம்? இனிமேல் என்னை கேட்காமல் ஏதாவது செய்தால் தொலைத்து விடுவேன்’ என்று கூறுகிறார். முதல் முறையாக விஜயாவின் இன்னொரு பக்கத்தை பார்த்த ரோகிணி அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் தன்னுடைய மற்ற விஷயமெல்லாம் தெரிந்தால் என்ன ஆகுமோ என்று அதிர்ச்சி அடைந்துள்ளார்.
‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் இனி அடுத்தடுத்த எபிசோடுகளில் ரோகிணியின் ஒவ்வொரு மோசடிகளும் விஜயாவுக்கு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com