கடன் வாங்கி விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்!

  • IndiaGlitz, [Wednesday,October 30 2019]

விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் முதல் வார இறுதியில் மட்டும் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து விட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. 

இந்த நிலையில் நேற்று விஜய் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்தபோது போரூர் அருகே உள்ள ஆலப்பாக்கத்தில் சேர்ந்த இளைஞர் ஒருவரின் மொபைலில் இருந்து தான் விஜய்க்கு மிரட்டல் வந்துள்ளது என்பது தெரியவந்தது. 

இதனை அடுத்து அந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்ததில் தன்னுடைய மொபைல் போனை சேப்பாக்கத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேசுவதற்காக கடன் கேட்டதாகவும், அவருக்கு தனது மொபைல் போனை கொடுத்ததாகவும் அவர் கூறினார். 

இதனையடுத்து போரூர் இளைஞரிடம் கடன் வாங்கி பேசியவர் தான் மிரட்டல் விடுத்த நபராக இருக்கும் என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் சேப்பாக்கம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் அந்த நபர் பிடிபட வாய்ப்பு இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

More News

அட்லிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த பாலிவுட் பிரபலம்!

தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிய பிகில் திரைப்படம் கடந்த 25ஆம் தேதி வெளியாகி

'இந்தியன் 2' படத்தில் இணையும் 'கைதி' பட நடிகர்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்

கனமழை எதிரொலி: 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மிதமான, கனமழை பெய்து வரும்

நீட், பேனர் மற்றும் ஆழ்துளையால் பலியான உயிர்கள்!

தமிழகத்தில் ஒரு மரணம் ஏற்பட்டால் மட்டுமே ஒரு பிரச்சனை குறித்து அதிகமாக பேசும் வழக்கம் கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது 

கார் விபத்தில் தமிழ்ப்பட ஹீரோ பரிதாப பலி

கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த புழல்' என்ற திரைப்படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக நடித்த மனோ என்ற நடிகர் கார் விபத்தில் பரிதாபமாக பலியானார். அவருக்கு வயது 37