வெங்கட்பிரபுவுக்கு விஜய் கொடுத்த 'மங்காத்தா' விருந்து

  • IndiaGlitz, [Thursday,October 06 2016]

அஜித்தின் கேரியரில் ஒரு முக்கியமான படம் என்றால் அது 'மங்காத்தா' என்று கூறினால் அது மிகையாகாது. இந்த படத்தை பார்த்தவுடன் ஆச்சரியம் அடைந்த இளையதளபதி விஜய் வெங்கட்பிரபுவை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்துள்ளார் என்ற தகவல் தற்போது வெங்கட்பிரபு நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இருந்து தெரிய வந்துள்ளது.
முதலில் தான் மட்டுமே விஜய் வீட்டிற்கு சென்றதாகவும், ஆனால் விஜய் ஏன் பிரேம்ஜி வரவில்லை, என் குழந்தைகள் அவருடன் போட்டோ எடுக்க விரும்பினார்கள் என்று கூறியவுடன் பிரேம்ஜிக்கு போன் செய்து வரவழைத்தேன் என்று கூறிய வெங்கட்பிரபு, விஜய்யின் குழந்தைகளான சஞ்சய் மற்றும் திவ்யா, பிரேம்ஜியுடன் புகைப்படம் எடுத்து கொண்டதாகவும் கூறினார்.
பின்னர் பிரேம்ஜிக்கு விஜய் பல நல்ல அறிவுரைகளை கூறினாராம். அண்ணன் படங்களில் மட்டும் நடிக்காமல் பிற இயக்குனர்கள் படங்களிலும் நடிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் பல புதுமையான அனுபவங்கள் கிடைக்கும் என்றும் விஜய் கூறியுள்ளார். மேலும் என்னுடைய படத்தை வெங்கட்பிரபு இயக்கினால் பிரேம்ஜி அதில் கண்டிப்பாக நடிக்கக்கூடாது என்றும் ஏன் என்றால் 'நீ தல ஆள்' என்று எனக்கு தெரியும் என்றும் ஆனால் அந்த படத்தின் மியூசிக் டைரக்டர் நீதான் என்றும் விஜய் கூறியதாக வெங்கட்பிரபு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
ரஜினி-கமல் போல் அஜித்-விஜய் என்று இந்த தலைமுறையினர்களுக்கு எடுத்துக்காட்டாக இருவரும் உள்ளதாகவும், அஜித்தின் வெற்றி படத்தை இயக்கிய என்னை விஜய் அழைத்து விருந்து கொடுப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை என்றும் வெங்கட்பிரபு தன்னுடைய பேட்டியில் மேலும் கூறினார்.

More News

சன்னிலியோன் படத்தில் இணைந்த ரம்யா நம்பீசன்

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் நடித்த 'ராகினி எம்.எம்.எஸ் 2' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி வட இந்தியாவில் மாபெரும் வெற்றி பெற்றது...

ரிலீசுக்கு முன்னர் 'ரெமோ'வுக்கு கிடைத்த நல்ல செய்தி

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ரெமோ'...

'பிரேமம்' இயக்குனருக்கு கிடைத்த பதவி உயர்வு

'நேரம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், சமீபத்தில் வெளிவந்த 'பிரேமம்' படத்தின் மூலம்...

விஜய்-அட்லி திரைப்படம் திடீர் தள்ளிவைப்பா?

இளையதளபதி விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தனது 61வது படத்தில் அட்லி...

திருமணத்திற்கு பின் சமந்தா நடிப்பாரா? நாக சைதன்யா பதில்

நாகசைதன்யா-சமந்தா காதலை இருவீட்டாரும் ஏற்றுக்கொண்டனர் என்பதும் இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம் இவர்களது திருமணம்...