வறுமையில் வாடிய காதல் தம்பதி: 2 மணி நேரத்தில் பணம் அனுப்பிய தளபதி விஜய்!
Send us your feedback to audioarticles@vaarta.com
வறுமையில் வாடிய காதல் ஜோடி ஒன்றுக்கு இரண்டு மணி நேரத்தில் தளபதி விஜய் பணம் அனுப்பி உதவி செய்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த காதல் ஜோடி அமீன் மற்றும் கண்சுலாபீவிவுக்கு சமீபத்தில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. அமீன், தேனியில் வேலை பார்த்து வந்ததால் மனைவியை அழைத்து கொண்டு அவர் தேனிக்கு குடிபெயர்ந்தார்.
தேனிக்கு வந்த ஒருசில மாதங்களில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அமீனால் வேலைக்கு செல்ல முடியவில்லை. மேலும் தனது மனைவி ஐந்து மாத கர்ப்பிணி என்பதால் அவரை அழைத்து கொண்டு சொந்த ஊருக்கும் செல்ல முடியவில்லை. மேலும் புதியதாக குடிவந்ததால் அவருக்கு ரேசன் கார்டும் இல்லை என்பதால் அரசின் உதவித்தொகையும் கிடைக்கவில்லை.
எனவே கர்ப்பிணி மனைவியுடன் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அமீன் கஷ்டப்படுவதை அறிந்த தேனி மாவட்ட விஜய் மக்கள் மன்றத்தினர் இதுகுறித்து உடனடியாக விஜய்க்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த இரண்டே மணி நேரத்தில் தேனி காதல் தம்பதிக்கு தளபதி விஜய் ரூ.5000 அனுப்பியுள்ளார். இதனையடுத்து விஜய் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு அமீன் மற்றும் கண்சுலாபீவி ஜோடி நன்றி தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com