எந்த அரசியல் கட்சியும் செய்யாத உதவி.. நெல்லையில் விஜய் செய்த செயல்..!

  • IndiaGlitz, [Sunday,December 31 2023]

தளபதி விஜய் நேற்று நெல்லை சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய நிலையில், எந்த அரசியல் கட்சியும் செய்யாத ஒரு செயலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் நெல்லை உட்பட நான்கு மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக நெல்லையில் ஒரு வீடு முற்றிலும் ஆக இடிந்து வெள்ளத்தில் சிதைந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் வெள்ளத்தால் வீட்டை இழந்த குடும்பத்தினர் தங்களுக்கு மீண்டும் வீடு கட்ட உதவி செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டனர். ஆனால் இதுவரை எந்த அரசியல் கட்சியும் அவருக்கு வீடு கட்டிக் கொடுக்க முன்வரவில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று நெல்லையில் தளபதி விஜய் அந்த குடும்பத்தினரை சந்தித்து வீடு கட்டுவதற்கு நிதி உதவி செய்துள்ளார். அது மட்டும் இன்றி வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வாங்கி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

எந்த அரசியல் கட்சியும் அந்த குடும்பத்திற்கு உதவாத நிலையில் தளபதி விஜய் உதவியுள்ளதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

இந்த வாரம் எவிக்சன் ஆகும் 2 போட்டியாளர்களுக்கு இத்தனை லட்சங்கள் சம்பளமா?

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நிக்ஸன் மற்றும் ரவீனா ஆகிய இரண்டு போட்டியாளர்கள் எவிக்சன் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இருவருக்குமே லட்சக்கணக்கில் சம்பளம் கிடைத்துள்ளதாக

இந்த வாரம் ஒன்றல்ல.. இரண்டு எலிமினேஷன்.. யார் யார் வெளியேறினார்கள்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் படலம் நடைபெறும் நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படுவது ரவீனா என்ற தகவல் வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ஐந்தில் ஒருவருக்கு தான்.. யாருக்கு அதிர்ஷ்டம்.. சேரனின் அடுத்த படைப்பின் டிரைலர்..!

தமிழ் திரை உலகின் தரமான இயக்குனர்களில் ஒருவரான சேரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வெப் தொடர் 'சேரன்ஸ் ஜர்னி'. இந்த தொடர் வரும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில்

டாஸ்க்கில் நிக்சன் செய்த பிராடுத்தனம்.. போட்டு கொடுத்த அர்ச்சனா.. லெப்ட் ரைட் வாங்கிய கமல்..!

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வைக்கப்பட்ட டாஸ்க்கில் நிக்சன் பிராடுத்தனம் செய்து வெற்றி பெற்றதாக ஏற்கனவே நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவை செய்த நிலையில்

2023ஆம் ஆண்டின் கடைசி நேரத்தில் சமந்தாவின் தரமான செயல்.. செம்ம ஃபிட் ஆகிட்டாங்க போல..!

நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் 2023 ஆம் ஆண்டின் கடைசி வொர்க் அவுட் என்று பதிவு செய்துள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.