எந்த அரசியல் கட்சியும் செய்யாத உதவி.. நெல்லையில் விஜய் செய்த செயல்..!

  • IndiaGlitz, [Sunday,December 31 2023]

தளபதி விஜய் நேற்று நெல்லை சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய நிலையில், எந்த அரசியல் கட்சியும் செய்யாத ஒரு செயலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் நெல்லை உட்பட நான்கு மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக நெல்லையில் ஒரு வீடு முற்றிலும் ஆக இடிந்து வெள்ளத்தில் சிதைந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் வெள்ளத்தால் வீட்டை இழந்த குடும்பத்தினர் தங்களுக்கு மீண்டும் வீடு கட்ட உதவி செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டனர். ஆனால் இதுவரை எந்த அரசியல் கட்சியும் அவருக்கு வீடு கட்டிக் கொடுக்க முன்வரவில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று நெல்லையில் தளபதி விஜய் அந்த குடும்பத்தினரை சந்தித்து வீடு கட்டுவதற்கு நிதி உதவி செய்துள்ளார். அது மட்டும் இன்றி வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வாங்கி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

எந்த அரசியல் கட்சியும் அந்த குடும்பத்திற்கு உதவாத நிலையில் தளபதி விஜய் உதவியுள்ளதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.