சிம்புவுக்கு தானாக முன்வந்து உதவிய விஜய்
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் சத்தமில்லாமல் பிறருக்கு உதவி செய்வதில் வல்லவர் என்பது பல உதாரணங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது வந்த புதிய தகவலின்படி சிம்புவின் வாலு படம் ரிலீஸ் ஆக விஜய் தானாக முன்வந்து உதவி செய்திருப்பது அனைவரையும் ஆச்சரியக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
சிம்புவின் 'வாலு' திரைப்படம் பல தடைகளை தாண்டி வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்தின் மொத்த விநியோக உரிமையை தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியிடமிருந்து வாங்கிய டி.ராஜேந்தர், சில பகுதிகளில் மற்ற விநியோகஸ்தர்களுக்கு விற்றுவருகிறார். இந்நிலையில் கோவை மற்றும் திருச்சி நகரங்களில் வாலு` விநியோக உரிமையை காஸ்மாஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சிவா என்பவர் வாங்கியிருக்கிறார். இவர் வழக்கமாக விஜய் படங்களை விநியோகிப்பவர். .இந்தத் தகவல் விஜய் காதுக்கு போனவுடன் அவர் உடனடியாக சிவாவை அழைத்து `வாலு` படம் எந்தப் பிரச்சனையுமில்லாமல் வெளியாக ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
விஜய்யின் 'தலைவா' திரைப்படம் பிரச்சனையில் சிக்கியபோது, விஜய்க்கு ஆதரவாக முதலில் குரல் கொடுத்தவர் சிம்புஎன்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிம்பு ஒரு தீவிர அஜீத் ரசிகர் என்றும் அனைவருக்கும் தெரிந்த நிலையில் விஜய்தானாகவே முன்வந்து பெரிய மனதுடன் உதவி செய்திருப்பதை சிம்புவின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில்வரவேற்றுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments