ஜார்ஜியா படப்பிடிப்பு நிறைவு நாளில் ரசிகர்களுக்காக விஜய் செய்த விஷயம்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

கடந்த 6ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்து விட்டு விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் அன்று இரவே ஜார்ஜியா சென்றனர் என்றும் அதன் பின்னர் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஜார்ஜியா படப்பிடிப்பு ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் என்று சமீபத்தில் தகவல் வந்த நிலையில் இன்றுடன் ஜார்ஜியா படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தெரிகிறது. இதனையடுத்து இன்று படப்பிடிப்பு முடிந்தவுடன் ஜார்ஜியா ரசிகர்களுக்கு விஜய் தனது கைப்பட கையெழுத்திட்டு புகைப்படங்கள் அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த புகைப்படங்களை பெற்ற ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வரும் நிலையில் அந்த பதிவுகள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. ‘பிரியமுடன் விஜய்’ என்ற விஜய்யின் கையெழுத்துடன் கூடிய இந்த புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் பார்த்து கொண்டாட்டத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆக்சிஜன் அவசர தேவையா? உதவி எண் அறிவித்த தமிழக அரசு!

தமிழகத்தில் தினமும் கொரோனா வைரசால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கு செலுத்துவதற்கு

அடுத்த மார்ச் 2022 லும் கொரோனா மிரட்டுமா? பதைக்க வைக்கும் மருத்துவரின் வீடியோ விளக்கம்!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி வெறும் 11 என்ற எண்ணிக்கையி&

1 ரூபாயை பெற்றுக்கொண்டு ஆக்சிஜன் சிலிண்டரை நிரப்பிக் கொடுக்கும் நல்ல உள்ளம்!

கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டரை  1 ரூபாயைப் பெற்றுக்கொண்டு உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நபர் நிரப்பிக் கொடுத்து வருகிறார்.

தமிழக மக்களுக்கு சுகாதாரச் செயலாளர் கூறிய முக்கிய அறிவுரை!

கொரோனா வைரஸின் இரண்வடாது அலை இந்தியா முழுவதும் தீவிரம் பெற்று வருகிறது.

காசிமேடு மீன்மார்க்கெட்டில் குவிந்த கூட்டம்: கொரோனாவுக்கு கொண்டாட்டம்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சகட்டத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒரு பக்கம் மத்திய மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து