இயக்குனர் லோகேஷூக்கு 4 மாதங்கள் டைம் கொடுத்த விஜய்!

  • IndiaGlitz, [Wednesday,May 22 2019]

தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் 'தளபதி 63' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லும் வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாளன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க பல பிரபல இயக்குனர்கள் காத்திருந்தபோதிலும் அவர் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறிய கதையில் இம்ப்ரஸ் ஆகி அவருக்கே அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இந்த படத்திற்காக இயக்குனர் லோகேஷூக்கு 120 நாட்கள் அதாவது நான்கு மாதங்கள் விஜய் கால்ஷீட் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டுக்குள்ளே முடிவடையவும் வாய்ப்பு உள்ளது.

இந்த படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சினேகா பிரிட்டோ தயாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.