விஜய்க்கு கிடைத்த புதிய நண்பர்.. வீட்டுக்கு செல்லும் அளவுக்கு நெருக்கம்.. எல்லாம் 'கோட்' மாயாஜாலம்..!

  • IndiaGlitz, [Monday,July 15 2024]

‘கோட்’ படத்தில் நடிக்கும் போது விஜய்க்கு புதிய நண்பர் கிடைத்துள்ளதாகவும் அவருடைய வீட்டிற்கு செல்லும் அளவுக்கு விஜய் நெருக்கமாக பழகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் ஒரு மல்டி ஸ்டார் படம் என்பதும் இந்த படத்தில் விஜய் மட்டுமின்றி மோகன், பிரசாந்த் உள்பட பலர் நடித்து வந்தனர் என்பது தெரிந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது விஜய், மோகன், பிரசாந்த் ஆகியோர் அரட்டை அடிப்பதை பார்க்க முடிந்ததாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக விஜய் படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது வித்தியாசமாக அவர் அனைவரிடமும் கலகலப்பாக பேசியதாகவும் குறிப்பாக மோகனிடம் மட்டும் அவர் அளவுக்கு அதிகமாக ஒன்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் விஜய்க்கு மோகன் என்ற புதிய நண்பர் கிடைத்து விட்டதாகவும் விஜய் வீட்டுக்கு மோகனும், மோகன் வீட்டுக்கு விஜய்யும் வந்து செல்லும் அளவுக்கு இந்த நட்பு நெருக்கமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது

கடந்த 80களில் அறிமுகமான நடிகர் மோகன் 90 ஆம் ஆண்டு வரை மிகவும் பிஸியாக இருந்தார். ஒரு வருடத்திற்கு 10 படங்கள் வரை அவர் நடித்த காலமெல்லாம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மோகன் கிட்டத்தட்ட தமிழ் திரையுலகில் இருந்து விலகும் நிலையில் தான் விஜய் திரையுலகில் அறிமுகமானார். அதனால் மோகன் மற்றும் விஜய் இணைந்து நடித்த வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது விஜய் படத்தில் மோகன் நடித்துள்ளதை அடுத்து இருவருக்கும் நெருக்கமாக நட்பு ஏற்பட்டுள்ளதை திரையுலகினர் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.