அவன் அடிச்சா அடி விழாது, இடி விழும்.. விஜய் நண்பரின் ஆவேச பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் அவருடைய பல திரைப்படங்களில் நடித்தவருமான நடிகர் தனது சமூக வலைதளத்தில் ’அவன் அடிச்சா அடி விழாது, இடி விழும்’ என்று ’கோட்’ படம் குறித்து பதிவு செய்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் முழு வீச்சில் நடைபெற்று வரும் தொழில்நுட்ப பணியும் இன்னும் சில மாதங்களில் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’கோட்’ திரைப்படம் ஏற்கனவே செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விருந்தாக வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்த நிலையில் திட்டமிட்டபடி படத்தை வெளியிட படக்குழுவினர் இரவு பகலாக பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய்யின் நண்பர்களில் ஒருவரும் விஜய்யின் பல படங்களில் நடித்தவருமான ஸ்ரீமான் தனது சமூக வலைத்தளத்தில் ’கோட்’ படம் குறித்து பதிவு செய்துள்ளார். அதில் செப்டம்பர் மாதம் தனக்கு மூன்று சிறப்பான நாட்கள் என்றும், ஒன்று என் அப்பன் விநாயகர் சதுர்த்தி, மற்றொன்று செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் ’கோட்’ படத்தின் ரிலீஸ் அடுத்ததாக செப்டம்பர் 16ஆம் தேதி என்னுடைய பிறந்தநாள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதில் இந்த பதிவில் ’அவன் அடிச்சா அடி விழாது, இடி விழும்’ முதல் நாள் முதல் காட்சிக்காக காத்திருக்கிறேன்’ என்றும் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.
Triple enjoyment in
— actor sriman (@ActorSriman) May 9, 2024
September for me
Yen appan vinayagar chathurthy
The eagerly waiting to whistle is on September 5 th
Avan adicha aadee vizhathu
idi vizhum
first day first show
GOAT - The Greatest Of ALL TIME.
Third happy day for my family friends is Sep16 th my birthday
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments