விஜய் அளவுக்கு எதிரிகள் யாருக்கும் இல்லை: நடிகர் சஞ்சீவ்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமூக வலைத்தளங்களில் நேற்று அஜித், விஜய் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து நடிகர்கள் சிபிராஜ், கிரிக்கெட் வீரர் அஸ்வின், நடிகர் சுதீப், நடிகை கஸ்தூரி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி உள்பட பலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக #RIPActorVijay என்ற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் டிரண்டாக்கியதற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இந்த நிலையில் விஜய்யின் பள்ளிக்கால நண்பரும், அவருடன் சில படங்களில் நடித்தவருமான நடிகர் சஞ்சீவ் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியபோது, 'விஜய் பார்க்காத துரோகமும் இல்ல... விஜய் அளவு எதிரிகளும் யாருக்கும் இல்ல... இருந்தும் திரையில் விஜய் அதை பத்தி பேசினது இல்லை. பெருமையா சொல்லுவவேன் என்ன நண்பன் ஜோசப் விஜய்'' என்று தெரிவித்துளார்.
நேற்று நடந்த அஜித், விஜய் ரசிகர்களின் ஹேஷ்டேக் மோதல் மீண்டும் ஏற்படக்கூடாது என்றும், தங்கள் விருப்பத்துக்குரிய நடிகர்களை வாழ்த்துவதற்கு மட்டுமே சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி நெகட்டிவ் எண்ணங்களை தவிர்த்திடுமாறு பெரும்பாலான நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் பார்க்காத துரோகமும் இல்ல...
— Sanjeev (@SanjeeveVenkat) July 29, 2019
விஜய் அளவு எதிரிகளும் யாருக்கும் இல்ல... இருந்தும் திரையில் விஜய் அதை பத்தி பேசினது இல்லை. பெருமையா சொல்லுவவேண் என்ன நண்பன் Joseph Vijay to #ThalapathyVijay :)) #LongLiveVIJAY ?? pic.twitter.com/spzmX9ba69
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments