close
Choose your channels

எம்.ஜி.ஆரை பின்பற்றும் விஜய்?

Friday, February 5, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் டீசர் இன்று அதிகாலை வெளியாகி விஜய் ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் விஜய் இந்த படத்தில் எம்.ஜி.ஆர் ரசிகராக நடித்து வருவதாக செய்தி வெளியாகி பின்னர் அது படக்குழுவினர்களால் மறுக்கப்பட்டது.


இந்நிலையில் நேற்று வெளியான டீசரில் விஜய், ஜெயில் கைதிகளுக்கு வகுப்பறையில் பாடம் நடத்துவது போன்ற ஒரு ஷாட் இடம்பெற்றுள்ளது. கடந்த 1975ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த 'பல்லாண்டு வாழ்க' திரைப்படத்தில் ஜெயில் கைதிகளுக்கு அறிவுரை கூறி அவர்களை திருத்துவது போன்ற கதை அமைக்கப்பட்டிருக்கும். எம்.ஜி.ஆர் பாணியில் விஜய், இந்த படத்தில் ஜெயில் கைதிகளை திருத்துகிறாரா? அல்லது அவரது அதிரடி பாணியில் ட்ரீட் கொடுத்துள்ளாரா? என்பது படம் வெளிவந்த பின்னர்தான் தெரிய வரும்.


விஜய், சமந்தா, எமிஜாக்சன், இயக்குனர் மகேந்திரன், ராதிகா, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள 'தெறி' படத்தை அட்லி இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.