சாத்தான்குளம் சம்பவம்: தளபதி விஜய் தரப்பில் இருந்து வந்த எதிர்ப்பு குரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சாத்தான்குளம் தந்தை மகன் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் லாக்கப் மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ள நிலையில் இதுகுறித்து தமிழ் திரையுலக பிரமுகர்கள் பலர் தங்களுடைய கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்து வருகின்றனர்.
ரஜினி, கமல் முதல் கிட்டத்தட்ட அனைத்து திரை உலக பிரபலங்களும் கருத்து தெரிவித்த நிலையில் தற்போது தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் அவர் கூறியிருப்பதாவது.
இந்த கொரோனா என்ற கொடிய வைரஸ் இடமிருந்து கூட தப்பித்துவிட உயிரோடு திரும்பி விடலாம். ஆனால் சாத்தான்குளம் போலீஸ் அதிகாரிகளிடம் சிக்கினால் கண்டிப்பாக உயிரோடு திரும்ப முடியாது, இந்த கொரோனா காலத்தில் எத்தனை போலீஸ் அதிகாரிகள் கடவுளுடைய பிரதிநிதிகளாக கருதப்படுகிறார்கள். அதை மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. அப்படிப்பட்ட போலீஸ் துறையில் இதுபோன்ற சாத்தான்களா? இவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த சாத்தான்களை காப்பாற்ற நினைக்கும் யாரையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
#சற்றுமுன்
— Mukesh Vijay ?? Master ?? (@mukeshperumal1) July 1, 2020
கொரோனாவில் இருந்து கூட தப்பிச்சடலாம் சாத்தான் குளம் போன்ற போலிஸ் கிட்ட மாட்டுனா? சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தளபதி தந்தை #SAC @Dr_Ecr_official @thalapathyvsiva @Manidhan_Offl pic.twitter.com/At5qeTEE2M
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments