அஜித் குறித்து விஜய் தந்தை கூறியது என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் குறித்து பெருமையாக பேசாத திரையுலகினர்களே இருக்க மாட்டார்கள் என்பது தெரிந்ததே. இந்த வகையில் அஜித்துக்கு தளபதி விஜய்யின் வீட்டிலேயே ரசிகர்கள் உள்ளனர். ஆம், விஜய்யின் தந்தை, தாய் இருவருக்குமே பிடித்த நடிகர்களில் ஒருவர் அஜித் தான்
இந்த நிலையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அஜித் குறித்து கூறியபோது, 'எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் அஜித். எனக்கு மட்டுமல்ல, என் மனைவி ஷோபாவுக்கும் அஜித்தை ரொம்ப பிடிக்கும். அஜித்தும் விஜய்யும் சேர்ந்த நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது என் மனைவி ஷோபா, அஜித்-விஜய் இருவருக்குமே சாப்பாடு செய்து அனுப்புவார். அந்த சாப்பாட்டை சாப்பிட்ட பின்னர் அஜித் போன் செய்து நன்றி கூறுவார். அதேபோல் ஷாலினியின் தந்தை எனக்கு நெருக்கமான நண்பர். நான் இயக்கிய படங்களில் பணிபுரிந்துள்ளார்.
அஜித்தின் பிறந்த நாள் வரும் மே 1ஆம் தேதி வரவுள்ள நிலையில் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய எஸ்.ஏ.சி, 'அஜித் இன்னும் பல பிறந்த நாள்களை கொண்டாடி அவரது வாழ்க்கையும், தொழிலும் குடும்பமும் செழிப்பாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்' என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout