'பீஸ்ட்' படம் பார்த்த ரசிகர்களுக்கு பெட்ரோல் இலவசம்: ரசிகர்கள் அசத்தல்

‘பீஸ்ட்’ படம் பார்த்த ரசிகர்களுக்கு விஜய் ரசிகர்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக தந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தை இன்று அதிகாலை 4 மணிக்கு விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தனர். இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

சென்னை தாம்பரம் வித்யா திரையரங்கில் ‘பீஸ்ட்’ படம் பார்த்து வெளியே வந்த ரசிகர்களுக்கு விஜய் ரசிகர் மன்ற முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் இருசக்கர வாகனங்களில் வந்த 100 பேருக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கினார்கள். இதனால் படம் பார்த்த பொதுமக்கள் விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.