மாஸ்டரை ஹெட்மாஸ்டராக ஆக்கிவிடாதீர்கள்: அரசியல்வாதிகளுக்கு விஜய் ரசிகர்கள் எச்சரிக்கை

தளபதி விஜய் நடித்த திரைப்படங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சைக்கு பின்னரோ அல்லது வெளிவந்த பின்னர் சர்ச்சை ஏற்படுவதோ வழக்கமாகி வருகிறது. ஆனால் விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்திற்கு படப்பிடிப்பின் போதே சர்ச்சை ஆரம்பமாகிவிட்டதாக கருதப்படுகிறது.

’மாஸ்டர்’ படப்பிடிப்பின் இடையில் திடீரென வருமான வரி அதிகாரிகள் சோதனைக்காக விஜய்யை அழைத்துச் சென்றது, படப்பிடிப்பின்போது எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்வது ஆகியவை விஜய்யை மட்டுமின்றி விஜய் ரசிகர்களையும் மிகுந்த அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது

இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் அவ்வப்போது இதுகுறித்து பரபரப்பான போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது புதுக்கோட்டை நகரில் விஜய் ரசிகர்கள் அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஒரு போஸ்டரை அடித்து ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் ’விஜய்யை நாங்கள் மாஸ்டராக மட்டுமே பார்க்க விரும்புகிறோம் ஆனால் அவரை நீங்கள் ஹெட்மாஸ்டர் ஆக்கி விடாதீர்கள்’ என்று அரசியல்வாதிகளுக்கு விஜய் ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த போஸ்டரால் புதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது