என்.எல்.சியில் பாஜகவினர் போராட்டம்: விஜய் ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக விஜய் வீட்டில் சோதனை நடத்திய நிலையில் விஜய்யிடம் பல மணி நேரம் விசாரணை செய்தனர். இதனையடுத்து நேற்று மாலையுடன் வருமான வரி சோதனை முடிவு பெற்றது
இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் மீண்டும் விஜய் கலந்து கொண்டதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் திடீரென பாஜகவினர் ஒரு சிலர் விஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெறும் என்.எல்.சி சுரங்கம் அருகே திடீரென போராட்டம் செய்தனர். என்எல்சி சுரங்கத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி தரக்கூடாது என்று அவர்கள் கோஷம் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இதுகுறித்த செய்தி அறிந்த நெய்வேலி பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் அதே பகுதியில் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் ரசிகர்களுக்கும் பாஜகவினர்களுக்கும் இடையே எந்த விதமான அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதற்காக அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது
#Master at Spot ?? pic.twitter.com/9a1Dx0rHYD
— VTL Team (@VTLTeam) February 7, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments